1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (19:13 IST)

கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 1 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள காட்டு வீர ஆஞ்சநேயர்  கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இந்த சிலை மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் இந்த கோவிலுக்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படும். பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை அக்கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு பக்தர்கள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
 
கோவில் நிர்வாகிகள் மூன்று மாதம் கழித்து, அந்த பையினை அப்புறபடுத்துவார்கள் என்றும், அதற்குள் அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும்  கூறப்படுகிறது. 
 
மேலும் ராமாயண காலத்தில், ராவணனை வெல்லும் போரில், இலங்கைக்கு செல்லும் வழியில், ராமன், லட்சுமணன் ஆகியோர் கிருஷ்ணகிரி காடுகளில் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது.
அப்போது, அனுமன் ராமருக்கு காவல் காத்திருந்த இடம் தான் இந்த காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ள இடம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran