திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:21 IST)

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்புகள்..!

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்.
 
இந்த கோவில்  1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.  சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆகியோரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  சதுரகிரி சித்தர் சிவயோக ஞான சித்தர் அம்மன் சிலையை வடிவமைத்ததாக சொல்லப்படுகிறது.
 
 மூலவர் மாரியம்மன் - அருள்மிகு சௌந்தரவல்லி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். 3 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
அம்மனின் முகம் அருள் நிறைந்ததாக இருக்கும்.
 
 தமிழகத்தின் மிகவும் பிரபலமான மாரியம்மன் கோவில்களில் ஒன்று.  அம்மை நோய் தீர்க்கும் அம்மனாக புகழ்பெற்றவர்.  தினமும் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10 நாள் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்
 
இந்த கோவில்  தினமும் 5 கால பூஜைகள் நடைபெறுகின்றன.  பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். குறிப்பாக அம்மனிடம் வேண்டிக்கொண்டு மொட்டை போடுவது பிரபலமான நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது.
 
 
Edited by Mahendran