1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2022 (10:47 IST)

வளர்பிறை தசமி நாளில் சிறப்பான கஜலக்ஷ்மி விரதம் !!

Gajalakshmi Viratham
கஜலட்சுமி பூஜையை ஆவணி மாதம் வளர்பிறை தசமி நாளில் சிறப்பானது. கஜலக்ஷ்மி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு எத்தகைய தீய எண்ணங்களும் ஒழிந்து கருணையே வடிவமாகத் திகழும் ஞானம் பிறக்கும்.


தனக்குத்தான் எல்லாம் என்கிற சுயநல எண்ணத்தை விடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் தானம் என்கிற சிறந்த புண்ணியத்தை பெற்றுக் கொள்ள கஜ லட்சுமி தாயாரை வழிபடுவது சிறப்பு.

கஜலட்சுமி தாயார் அஷ்ட லட்சுமிகளுக்கும் நடு நாயகமாக நின்று காட்சி தருபவளாக இருக்கின்றார். தன்னுடைய நாற்கரங்களில் இரு கைகளில் தாமரை மலர்களையும், மற்ற இரு கரங்களில் அபய, வர முத்திரையையும் காட்டி நமக்கு அருளினை கொடுப்பவராக இருக்கின்றார்.

கஜலட்சுமி என்கிற இந்த ஆதிலட்சுமி நம் ஒவ்வொருவருடைய வீட்டின் நிலைப்படிக்கு மேல் அமர்ந்து உள்ளதாக ஐதீகம் உண்டு.

பத்மாசன நிலையில் அமர்ந்து இருபுறமும் தேவ யானைகள் அபிஷேகம் செய்வது போல இருக்கும் இந்த கஜலட்சுமியை வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

ஒருவர் தனது வேலை தொடர்பான முன்னேற்றம் அடைய கஜலட்சுமி தேவியை தினந்தோறும் வழிபட்டு வந்தால், அவரது வாழ்வில் புகழ், மரியாதை, செல்வம் மற்றும் நிம்மதியைப் பெறலாம்.

தொழிலில் முன்னேற்றம், வியாபாரம் அதிகரிக்க கஜலட்சுமியை வழிபட்டால் நினைத்த முன்னேற்றத்தைப் பெறலாம். குழந்தை இல்லாதவர்கள் வழிபட்டால் குழந்தை வரம் பெற்றிடலாம்.

செல்வம், புகழ், ஆளுமை திறன் ஆகும். இந்த மூன்றும் ஒருவர் இடத்தில் இருந்து விட்டால் போதும், அவரை ஒருவராலும் அசைத்து விட முடியாது. இந்த மூன்றையும் கொடுப்பவர் தான் கஜலக்ஷ்மி. அஷ்ட லட்சுமிகளில் ஒன்றாக இருக்கும் கஜலட்சுமி, ராஜலட்சுமி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றார்.

ஆவணி மாத வளர்பிறை தசமி நாளில் தேவலோக யானைகள் அனைத்தும் ஒன்று கூடி இன்னாளில் கஜலட்சுமி தாயாரை வணங்கி நீராடி பிளிறலை எழுப்பி வழிபட்டதாக புராணங்கள் குறிப்பிடுகிறது.