1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (15:47 IST)

ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களும் பலன்களும் !!

Chittirai month
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையானது சொர்ணாம்பிகை அம்மனுக்கு உரியது. சொர்ணாம்பிகை அம்மன் பார்வதி தேவியின் ஒரு வடிவம். எனவே, ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையின்போது, சொர்ணாம்பிகை அம்மனை மனம் உருகி வேண்டினால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.


ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் மற்றொரு வடிவம்தான் அங்காள அம்மன். ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையின்போது அங்காள அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.

ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது. இந்த அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு வடிவம். எனவே, காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின்போது வேண்டினால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையானது காமாட்சி அம்மனுக்கு உகந்தது. இவர் சக்தியின் ஓர் வடிவம். இவரை ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையின்போது வணங்கினால், நம்மை சுற்றியுள்ள தீய சக்தி நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.