1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (10:08 IST)

வாராஹியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள் எது தெரியுமா...?

Varahi
மாதந்தோறும் வளர்பிறைதான் வராஹி வழிபாட்டுக்கு உகந்த அற்புத நாள். பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி.


கோலம் போடுவது என்பது அம்பிகையை ஆத்மார்த் தமாக வரவேற்கும் வடிவம். லக்ஷ்மியின் வருகை தினமும் நிகழ வேண்டும். அனவரதமும் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் வாசலில் கோலமிடச் சொல்கிறது சாஸ்திரம். கோலமிட்ட வீட்டில் அம்பிகை மிகுந்த கனிவுடன் சுபிட்சத்தை வழங்க எழுந்தருள்கிறாள் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதியிலும் வராஹி தேவியை மனதார வழிபடுங்கள். வீட்டில் விளக்கேற்றுங்கள். தேவியின் திருநாமங்களைச் சொல்லி உங்கள் பிரார்த்தனைகளை அவளிடம் சொல்லி முறையிடுங்கள். வளர்பிறை பஞ்சமி நாளில், வராஹியை நினைத்துக் கொண்டு, காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுங்கள். வாராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள்.

வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும். வாராஹிதேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம் நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது.

மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக் கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து படைக்கலாம்.