குழந்தைகள் கல்வியில் சிறந்தவராக விளங்க சொல்லவேண்டிய மந்திரம்

குழந்தைகள் கல்வியில் சிறந்தவராக விளங்க சொல்லவேண்டிய மந்திரம்


Sasikala|
குழந்தைகளை சூரிய உதய காலத்தில் நீராடச் செய்து, அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக் குறி (திருநீறு அல்லது திருமண்) இடச் செய்து, மூன்று முறை திரியம்பகம் - மாம்ருதாத் மந்திரத்தைச் சொல்லச் சொல்லி, பிறகு துளசி தீர்த்தத்தைப் பருகக் கொடுக்க வேண்டும். 

 
 
அடுத்ததாக... ஸ்ரீஞானசரஸ்வதி மற்றும் ஸ்ரீயாக்ஞவல்கியரின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, பூஜையறையில் கிழக்குமுகமாக வைத்துக்கொள்ளுங்கள். முதலில் 'ஸ்ரீவித்யா கணபதயே நம’ என்று மூன்று முறைச் சொல்லி அருகம்புல் சமர்ப்பித்து பிள்ளையாரை வழிபட வேண்டும். பின்னர் கலைவாணி குறித்த துதிப்பாடல்கள் சொல்லி வழிபடுவதுடன், 'ஸ்ரீயாக்ஞவல்கியர் வித்யா துதி’யையும், மூன்று முறைச் சொல்லி வணங்கவேண்டும். 
 
பிறகு, தூப-தீப காட்டி, தேங்காய் - பழம் தாம்பூலம் மற்றும் பால் சாதம் சமர்ப்பித்து, மீண்டும் கற்பூர ஆரத்தி காட்டவேன்டும். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.
 
ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி
 
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம் 
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம் 
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம் 
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம். 
 
ஸ்துதி
 
ப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ 
ஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம: 
விஸர்க்க பிந்து மாத்ரேஷ யததிஷ்டான மேவஹா 
ததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம: 
வ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி 
யயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே 
கால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம: 
ப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம: 
ஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி 
ப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம: 
க்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம் 
ஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம் 
யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்
ஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத் 
பைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம் 
இதிஹியாக்ஞ வல்க்ய ஜிஹ்வாத்வாரே 
 
(ஸ்ரீவித்யா ஸ்துதி ஸம்பூர்ணம்) 
 
பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
 


இதில் மேலும் படிக்கவும் :