கண் திருஷ்டி மற்றும் தோஷக்களைப் போக்கும் கடல்நீர்

கண் திருஷ்டி மற்றும் தோஷக்களைப் போக்கும் கடல்நீர்


Sasikala| Last Modified சனி, 16 ஜூலை 2016 (12:09 IST)
கண் திருஷ்டி என்பது ஒருவருக்கு உடல் சுகவீணத்தை ஏற்படுத்தும். சில வேலைகளை செய்யும்போது உடல் சோர்வை ஏற்படுத்தும். கல் அடி பட்டாலும் கண் அடி பட கூடாது என்று கூறுவர்.

 


சோர்வு என்பது ஒருவருக்கு ஒரு வேலை செய்வதனால் சோர்வு ஏற்படுத்தும், இல்லையென்றால் கண் திருஷ்டியால் இருக்கும்.
 
உடலில் உள்ள 7 சக்கரங்கள் சீராக இருந்தால், ஆரோக்கியமாக இருக்க முடியும். கண் திருஷ்டியால் அவை பாதிக்க கூடும். அதிக கண் திருஷ்டி இருந்தால் கடல் நீரில் குளிக்கும்போது அதில் இருந்து விடுதலை பெற முடியும். உடல் ஆரோக்கியம் பெறும். நாம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர முடியும்.
 
திருஷ்டி உள்ளதை எவ்வாறு அறிந்து கொள்வது?
 
திருஷ்டி அதிகமாக உள்ள வீட்டில் ஒருவிதமான துற்வாடை வீசும். எவ்வளவுதான் வாசனை திரவியங்கள் தெளித்தாலும் போகாது. சாப்பிராணி பொன்ற  போட்டாலும் போகாது. இதனை வைத்து அங்கு துர் சக்தி உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம். அதனை போக்க கடல் நீரை கொண்டு வந்து வீட்டை சுத்தம் செய்யலாம். அல்லது தண்ணீரில் உப்பை கலந்து துடைத்து விடலாம்.
 
உப்பு குளியல்:
 
வாரம் ஒரு முறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இவ்வாறு குளிக்கலாம்.
 
எலுமிச்சைபழம்: 
 
வியாபாரத் தல்ங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சப்பழத்தை அறுத்து ஒரு பதுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்காலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்கிழமை செய்வது நலம் தரும். பழ்அத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும். இவ்வாறு வீடுகளுக்கும் செய்யலாம்.
 
கடல் நீர்:
 
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடர்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதி மஞ்சள் பொடியை கல்ந்து கடை, அலுவலகம், வீடி ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். 

கடல் நீரில் தெளிப்பதால் உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் பலப்படும். கண் திருஷ்டியை போக்க கடல் நீர் மிகவும் விஷேசமானது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 


இதில் மேலும் படிக்கவும் :