ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

ஹோமங்கள் செய்வதால் அதற்குறிய பலன் நம்மை வந்தடையும்....

அக்னிக்கு அர்பணிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

 
நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உறிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம். அக்னிக்கு  அர்பணிக்கும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது  சூட்சம ரகசியம். அது உறிய முறையில் காலத்தே நம்மை வந்து அடையும்.
 
மகா கணபதி ஹோமம் - தடையின்றி செயல்கள் நடைபெவும், லட்சுமி கடாச்சம் பெறவும்.
 
சந்தான கணபதி ஹோமம்  - நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.
 
வித்யா கணபதி ஹோமம் - கல்விக்காக
 
மோகன கணபதி ஹோமம் - திருமணத்திற்காக
 
ஸ்வர்ண கணபதி ஹோமம் - வியாபார லாபத்திற்காக
 
நவகிரக ஹோமம் - நவகிரகங்களினால் நன்மை ஏற்பட
 
லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம் - ஏழையும் செல்வந்தனாவான்
 
துர்க்கா ஹோமம் - எதிரிகளின் தொல்லை அகல
 
சுதர்சன ஹோமம் - கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் அகல
 
ஆயுஷ் ஹோமம் - ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்
 
மிருத்துந்தய ஹோமம் - ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்
 
தன்வந்திரி ஹோமம் - நோய் நிவாரணம்
 
ஸ்வயம்வரா ஹோமம் - திருமணதடை அகல, விரைவில் கைகூட
 
சந்தான கோபால கிருஷ்ணஹோமம் - குழைந்தை பேறு கிடைக்க
 
மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம் - மேற்கல்வி, தெளிந்த சிந்தனை கிடைக்கும்.