1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : திங்கள், 18 ஜூலை 2022 (13:36 IST)

வராஹி அம்மனை வழிபட உகந்த மந்திரங்கள் !!

Varagi Amman
வராகி அம்மனை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதிரிகளை அழிப்பதற்கு வராஹி அம்மன் ருத்ர அவதாரம் எடுப்பாள். எதிரியின் தொல்லை நீங்குவதற்கு வராஹி அம்மனின் மூல மந்திரத்தை 26 நாட்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வராகி அம்மனுடை ய மொத்த அருளும் உங்களுக்கு கிடைக்கும்.


வராஹி அம்மனை வழிபடுபவர்கள் வெள்ளை மொச்சை பருப்பை நன்றாக வேகவைத்து அதனுடன் தேன் மற்றும் நெய் கலந்து நைவேத்தியமாக படைத்து வராகி அம்மனை வழிபாடு செய்து வர வேண்டும்.

இந்த வழிபாட்டினை தினமும் செய்து வந்தால் எதிரிகளின் தொல்லை நீங்கும், அதோடு தன வசியம் பெருகும். தொழில் விருத்தி அடைந்து நல்ல செழிப்பாக இருக்கும்.

வராஹி மூல மந்திரம்:

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா

சகலவித பயங்களும் நீங்க வாராஹி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவியை நமஹ
ஓம் ஹ்ரீம் பயங்கரி அதிபயங்கரி ஆச்சர்ய பயங்கரி
சர்வஜன பயங்கரி ஸர்வபூத பிரேத பிசாச பயங்கரி
ஸர்வ பயம் நிவாரய சாந்திர்பவதுமே ஸதா.