வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (09:11 IST)

ஆமலகி ஏகாதசியில் விரதமிருப்பதால் விளையும் அற்புத நன்மைகள்!

Lord Vishnu
மாசி மாதத்தில் வரும் முதல் ஏகாதசியான ஆமலகி ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் சிறப்புக்குரிய நாளாகும்.


 
ஒவ்வொரு ஆண்டும் வளர்பிறை, தேய்பிறை காலங்களை கணக்கிட்டு மொத்தம் 25 ஏகாதசிகள் நிகழ்கின்றன. இதில் ஒவ்வொரு மாத ஏகாதசியும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதால் நவகிரகங்களின் கொடும் ரேகைகள் நம்மிலிருந்து விலகி பூரணை அருளை தரும்.

மாசி மாதத்தின் வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று ஆமலகி ஏகாதசி நாள். வளர்பிறையில் வரும் ஆமலகி ஏகாதசி வாழ்வில் செல்வ செழிப்பையும், வெற்றிகளையும் அருளக் கூடியது. இந்நாளில் விஷ்ணு பெருமாளை மனதில் நினைத்து விரதமிருந்து வழிபட்டு வருவது வாழ்வில் வளத்தை அளிக்கிறது.

இந்த ஆமலகி ஏகாதசி நாளில் நெல்லிக்காய் மரத்திற்கு பூஜை செய்து வணங்கினால் மகாலெட்சுமியின் அணுக்கிரகம் கிடைக்கும். சர்வ வளங்களையும் அள்ளி வழங்கக் கூடிய தேவிக்கு உகந்த நாளான இந்நாளில் பெருமாளை எண்ணி அவரது பாசுரங்களை பாராயணம் செய்வது சிறப்பை தரும்.

Edit by Prasanth.K