ஐயப்ப பக்தர்கள் நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன்?


Sasikala|
ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள், மலைக்கு செல்லும்போது இருமுடி கட்டி செல்வது வழக்கம்.

 


இருமுடி கட்டும்போது, குருசாமி வசிக்கும் இடத்திலோ அல்லது பொதுவான கோயில் மண்டபங்களிலோ வைத்து நடத்துவார்கள்.
 
இருமுடி தாங்கி செல்லும் பக்தர்கள், இருமுடிபையை தம்முடனே வைத்து கொள்ள வேண்டும். உறங்கும்போது மட்டும் அருகில் வைத்துக் கொள்ளலாம்.
 
ஐயப்ப கடவுளை மணிகண்டன் என்று அழைப்பார்கள். மணிகண்டன் புலிப்பால் கொண்டு வரச் சென்றபோது தேங்காய் எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. மூன்று கண்களை உடைய தேங்காய் முக்கண்ணனான சிவனைக் குறிக்கும். காட்டு வழியில் வனவிலங்கினால் ஏற்படும் தீமைகளிலிருந்து இந்த நெய் நிரம்பிய தேங்காய் பக்தர்களைக் காப்பாற்றுவதாக நம்பப் படுகிறது.
 
தேங்காயின் கண் பகுதி மனிதனின் ஆன்மிக அறிவையும், நெய்யானது ஆன்மாவையும், தேங்காய் மனித உடலையும் குறிக்கும்.
 
தேங்காய், பசு நெய் கொண்டு ஒரு கண் வழியே நிரப்பப்பட்டு அதனை அடைப்பான் கொண்டு நன்கு மூடிவிடுவர். 
 
ஒருவர் கடுமையான விரதமிருந்து இருமுடிகட்டி நெய் நிரம்பிய தேங்காயை தலையில் சுமந்து சென்று ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்விக்க, குருசாமி தேங்காயிலிருந்து அடைப்பானை நீங்கி பாத்திரத்தில் விழச் செய்யும் போதே கண்டுகொண்டு விடுவார், அவர்களது பவித்ர விரத மேற்கொள்ளும் திறனை என்று கூறுவர்.


இதில் மேலும் படிக்கவும் :