ஆவணி அவிட்டம் என்றால் என்ன? முக்கியத்துவம் மற்றும் நல்ல நேரம்..!
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சத்திர நாளை தான் ஆவணி அவிட்டம் என்று கூறப்படுகிறது.
பொதுவாக ஆவணி அவிட்டம் என்பது பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூல் அணிந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள் ஆவணி அவிட்டம் தினத்தன்று காலையில் குளித்து பின்னர் ஒரு கோவிலில் சென்று புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
பூணூலை மாற்றி தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்யும் வழிபாடு தான் ஆவணி அவிட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த ஆண்டு ஆவணி ஐட்டம் வருகிறது. அன்றைய தினம் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம் உள்ளதால் பூணூல் மாற்றுபவர்கள் காலை 7.15 மணிக்கு முன்பாக மாற்றி விட வேண்டும் என்று கூறப்படுகிறது
Edited by Mahendran