1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (18:05 IST)

நாளை மறுநாள் அமாவாசை.. விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!

நாளை மறுநாள் அமாவாசை தினத்தை முன்னிட்டு விரதம் இருந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்  
 
அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.  ஆறு அல்லது குளக்கரையில் இருக்கும் அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம் அல்லது முதியோர்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும்  தர்ப்பணம் செய்யலாம்
  
நாளை மறுநாள் விரதம் இருப்பவர்கள் காலை எதுவும் சாப்பிடாமல்  அகல் விளக்கேற்றி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, ஆனால் பகலில்  சாப்பிடலாம் இரவில் பால் பழம் அல்லது சிற்றுண்டிக்கு சாப்பிடலாம் 
 
முறைப்படி அமாவாசை விரதம் இருந்தால் முன்னோர்கள் ஆசை முழுமையான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran