1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2022 (21:29 IST)

ஆஞ்சநேயரை வழிபட்டால் என்னென்ன பலன்கள்?

Anjaneyar
இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப் பட்டதை அடுத்து அனைத்து ஆஞ்சநேயர் ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது என்பதும் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் ஏராளமான பலன் கிடைக்கும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
 
ஆஞ்சநேயரை  வழிபட்டால் ஆயுள் பலம் கிடைக்கும் என்றும் ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி வழிபடுவதன் மூலம் அனைத்து தொல்லைகள் தீரும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் மனதில் தாங்க முடியாத வேதனை இருந்தால் ஆஞ்சநேயரின் சிறப்புகளைக் கூறும் சுந்தரகாண்டத்தை படித்தால் துன்பங்கள் எல்லாம் தூசியாக பறந்தோடி விடும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
 
ஆஞ்சநேயரை வழிபட்டால் செல்வம் வரும் மன உறுதி வரும் வீரம் வரும் அதற்கு மேலாக பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் காம உணர்வே வராது என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva