வியாழன், 15 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated : வியாழன், 23 மார்ச் 2023 (23:28 IST)

வராக்கடன் வசூலாக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

வராக்கடன் வசூலாக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
வராக்கடன்  வசூலாக வேண்டுமென்றால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து நமது முன்னோர்கள் கூறியதை பார்ப்போம். பணம் கடன் கொடுத்தவர்கள் சில சமயம் பல ஆண்டுகள் ஆகியும் வராத நிலையில் அசல் வந்தால் கூட போதும் என்று புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் வராத கடனை வசூல் செய்ய ஒரு சில பரிகாரங்கள் செய்தால் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.
 
வராத கடனை வசூல் செய்வதற்கு செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்பு சாறு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் அதேபோல் செவ்வாய்க்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் நல்லெண்ணெயில் சிவப்பு திரி போட்டு ஆறு விளக்குகள் ஏற்றி சிவனை வழிபட்டால் வராத கடன்கள் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை என்ற பகுதியில் உள்ள சந்திர மௌலிஸ்வரர் மற்றும் அமிர்தேஸ்வரி அம்மனை வழிபட்டால் வராத கடன் வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran