நாம் போடும் மேக்கப் நீண்ட நேரம் நிலைத்திருக்க சில டிப்ஸ்.....!
நீண்ட நேரம் கலையாத சில மேக்கப் ட்ரிக்ஸ்களை பற்றி பார்ப்போம். முதலில் உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள், தூசிகள் போன்றவை நீங்க வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி, உலர்ந்த பிறகு மேக்கப் போட்டால் நீண்ட நேரம் கண்டிப்பாக நிலைத்திருக்கும்.
* அடுத்த படியாக மாய்ஸ்சரைசரை முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். அப்போது தான் மேக்கப் திட்டு திட்டாக தெரியாது. ஆனால் சரியான அளவு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்வதும் முக்கியம்.
* சிறிதளவு ப்ரைமரை எடுத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள்.ப்ரைமர் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை மிருதுவாக்கி உங்கள் மேக்கப்பிற்கு ஒரு பவுண்டேஷன் மாதிரி செயல்படுகிறது.
* உங்கள் முகத்தில் உள்ள துளைகளை மூடுவதற்கு சிலிக்கான் வகையான பவுண்டேஷனை பயன்படுத்துங்கள். அவை உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தாலும் போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும். பவுண்டேஷனை அப்ளே செய்வதற்கு முன் உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள், நிறத்திட்டுகள் போன்றவற்றை கண்சீலர் கொண்டு மறைக்க மறந்துவிடாதீர்கள்.
* நல்ல தரம் வாய்ந்த பவுடரை தேர்ந்தெடுப்பது நல்லது. சிறுதளவு பவுடரை பிரஷ்ஷில் தொட்டு முகத்தில் அப்ளே செய்யுங்கள். பிரஷ் இல்லாமல் அப்படியே பவுடரை முகத்தில் அப்ளே செய்யாதீர்கள்.
* வாட்டர் ப்ரூவ் உள்ள மஸ்காரா, ஐ லைனர் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் மேக்கப்பும் அழியாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். மஸ்காரா அப்ளே செய்வதற்கு முன் உங்கள் இமைகளை சுருட்டி விட சற்று மிதமான சூட்டில் ட்ரையர் பயன்படுத்துங்கள். பிறகு மஸ்காராவை அப்ளே செய்யுங்கள். அப்புறம் என்ன உங்கள் கண்கள் அழகாகி ஜொலிக்கும்.
* உங்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நிலைத்திருக்க க்ரீம் வகை கண்சீலரை பயன்படுத்துவது நல்லது.
* உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொஞ்சம் நேரம் கழித்து எண்ணெய் வடிய வாய்ப்புள்ளது. இதற்கு முகத்தை துடைத்தால் உங்கள் எல்லா மேக்கப்பும் பாழாகி விடும். எனவே டிஸ்யூ பேப்பரை கொண்டு முகத்தை ஒற்றி எடுத்தால் போதும். உங்கள் மேக்கப்பும் களையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.