வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தலைமுடியை பராமரிப்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் !!

முடியின் வேர்கள் ஸ்ட்ராங்காக இருந்தால் தான், முடிகளும் நன்கு அடர்த்தியாக வளரும். அதற்கு முடியின் வேர்களை நன்றாக மசாஜ் செய்து, இயற்கையான சில முறைகளில் அவற்றை நன்கு பராமரிப்பதன் மூலமே அழகான, அடர்த்தியான, நீளமான கூந்தலைப் பெற முடியும்.

நமது உணவில் புரோட்டீன்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் முட்டை, மீன், பால், சோயா ஆகியவை முக்கியம்.
 
முதலில் ஸ்கால்ப் பகுதியை எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஏனெனில் அதில் கொஞ்சம் அழுக்குப் படிந்தாலே  பாக்டீரியா வளர்ந்து, மயிர்கால்களின் ஆரோக்கியத்தை கெடுத்து, பின் முடியின் வளர்ச்சியை தடுத்துவிடும்.
 
தேங்காய் எண்ணெய், தேன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை பசை போலக் கலந்து, முடியின் வேர் பகுதிகளிலும், முடிகளிலும் அழுந்தப் படியுமாறு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நல்ல ஷாம்பு வைத்து தலையை நன்றாக அலச வேண்டும்.
 
தலைமுடியை சீப்பு வைத்து சீவும் போது, அளவுக்கு அதிகமாகவும் மிக அழுத்தமாகவும் சீவக் கூடாது. அழுத்தமாகச் சீவினால் மயிர்கால்கள் பாதிக்கும் அபாயம்  உள்ளது.
 
நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நாவறட்சி ஏற்படுவது மட்டுமல்ல; முடி வேர்களுக்கும் அது கெடுதல் தான். தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடித்தால், முடி வேர்கள் தானாகவே வலுவடையும்.
 
சூடான எண்ணெயால் தலைமுடியை மசாஜ் செய்வது மிகச் சிறந்த ஒரு வழியாகும். அதிலும் சூடான தேங்காய் எண்ணெய் இன்னும் அதிக பலன் கொடுக்கும். இந்த மசாஜை தொடர்ந்து செய்தால், மயிர்கால்கள் மிகவும் வலுவடையும்.