செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

இயற்கை பொருட்களைக் கொண்டு மென்மையான சருமத்தை எப்படிப் பெறுவது?

ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. மூலிகைகளால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.

 
* பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க  வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும்.
 
* முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு  கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.
 
* ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம்  மூன்றும் சமஅளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
 
* முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின்  நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
 
* வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் விழுது, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து உள்ளதோ அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வர  கருமை ஓடிவிடும்.
 
* கரு வளையம் போக: கண்களைச் சுற்றி பாதாம் ஆயில் தேய்த்தால் கரு வளையம் படிப்படியாக மறையும்.
 
* பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின்  குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும். 
 
* கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.