1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தலைமுடி உதிர்வதை தடுக்கும் உணவு வகைகள் !!

நம் உடலில் கூந்தலின் வேர் பகுதி வேகமாக வளரும் திசுக்களைக் கொண்டுள்ளது. ஆகவே கூந்தல் வேகமாக வளரும். பின் உதிர்ந்து விடும். கூந்தலை சரியான உணவு முறையில் நன்றாக வளரச் செய்யலாம்.     

முடி வளரத் தேவையான சத்துக்கள் விட்டமின் ஏ, சி, ஈ, பி5, பி6, பி12 மற்றும் இரும்பு சத்து, ஜிங்க், புரோட்டின், அமினோ அமிலங்கள் ஆகியவை முடி வளரத் தேவையான சத்துக்களாகும். 
 
பீன்ஸில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. அதோடு விட்டமின் பி, சி,கனிமங்களையும் நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பீன்ஸ் வகைகள் அனைத்துமே மிக  நல்லது. கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கருப்பு பீன்ஸ் ஆகியவைகள் கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகிறது.
 
பருப்புவகைகளில் அதிக அளவு புரோட்டின்,விட்டமின், மினரல் உள்ளன.இவைகளை தினமும் உண்டால் டல்லடிக்கிற கூந்தல் பிரகாசிக்கும். பாதாம், பீ நட்ஸ், வால்  நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஊறவைத்த பாதாம் மிகவும் நல்லதாகும்.
 
முடி வளர விதவிதமான எண்ணெய்கள் ஷாம்புக்கள் பயன்படுத்தினாலும் அவை வெளிபுறத்தில் காக்குமே தவிர, உள்ளிருந்து ஊட்டம் தர அதற்கு தேவையான சத்துக்கள் கொண்ட உணவினை உண்டால்தான் கூந்தல் வளரும்.
 
முட்டையில் உள்ள வெள்ளைக்கரு அல்புமின் என்ற புரோட்டினைக் கொண்டுள்ளது. அது கூந்தல் வளர தூண்டுகிறது. மஞ்சள் கருவும் விட்டமின்களை கொண்டுள்ளது. ஆதலால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் கூந்தல் மிளிர்வதை உணரலாம்.