செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகப்பருக்களால் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை மிருதுவாக்கும் வாழைப் பழத்தோல்!!

நாம் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்சனையை போக்கலாம். வாழைப் பழத்தோல் சருமப் பிரச்னையையும் தீர்க்கிறது.
வாழைப்பழம் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. இதன் தோல்களை பயன்படுத்தினால், முகப்பருக்களால் பொலிவிழந்து காணப்படும் சருமத்தை மிருதுவாக்கும்.
 
முதலில் சுத்தமான பாலை எடுத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அது ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால்  முகத்தை துடைக்க வேண்டும். அதன் பின்னர் வாழைப் பழத்தோலின் உள்பகுதியை எடுத்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடங்களுக்கு மசாஜ்  செய்ய வேண்டும். தொடர்ந்து மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் சருமம் பொலிவு  பெறும்.
 
இதேபோல் வாழைப்பழத்தோல், தேன் இரண்டையும் சேர்த்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பின் முகத்தை கழுவவேண்டும். தினம் இப்படி ஒருமுறை செய்தால் முகப்பரு வரவே செய்யாது. சருமம் உலர்ந்து போகாமல் ஈரத்தன்மையுடன் இருக்கும்.
 
வாழைப்பழத் தோலுடன் மஞ்சள்தூள் சேரும்போது முகம் பிரகாசமாகும். வாழைப்பழத் தோலுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவலாம். இவை முகப்பரு பிரச்சனையால் முகத்தில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க உதவும். இதை வாரத்தில் இரண்டு முறை மட்டுமே செய்ய வேண்டும்.
 
வாழைப்பழத்தோல் மற்ரூம் கற்றாழை ஜெல்லை சேர்த்து பசைபோல் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்வதனால் முகப்பருக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.