செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன பயன்கள் ...
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும்.
செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கிறது.
செவ்வாழையில் இரும்புச் சத்து சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. மேலும் குழந்தையில்லாமல் கவலைப்படும் தம்பதியர் தினமும் செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூல நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் நோயில் இருந்து விடுபடலாம்.மேலும் அஜீரண கோளாறால் அவதி படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் சரி ஆகிவிடும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.
வயது முதிர்வால் ஏற்படும் கண்பார்வை குறை உள்ளவர்கள் 21 நாட்கள் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் நன்றாக தெரியும்.
பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சரி ஆகிவிடும்.