1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (19:40 IST)

நட்ஸ் உணவுகளை சாப்பிட்டால் தொப்பை குறையுமா?

தொப்பை என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் இந்த தொப்பையை குறைப்பதற்கு நான்கு விதமான நட்ஸ் உணவுடன் சேர்த்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும் என்று கூறப்படுகிறது. 
 
 ஆரோக்கியமான முறையில் தொப்பையை குறைத்தால் தான் பக்க விளைவுகள் இருக்காது என்பதும் உணவு கட்டுப்பாடு மற்றும் கடும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தொப்பை குறைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்த்து ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிட்டால் தொப்பையை குறைக்க போதுமான வழி கிடைத்து விடும்.
 
 பாதாம், பிரேசில் நட்ஸ், அக்ரூட் பருப்பு மற்றும் பிஸ்தா ஆகிய நான்கு வகை நட்ஸ் உணவுகளை தினந்தோறும் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவது மட்டுமின்றி தொப்பையும் குறைந்து விடும் 
 
அதுமட்டுமின்றி இதய ஆரோக்கியம், பசி உணர்வை கட்டுப்படுத்தும் உணவுகளாக இவை உள்ளன.  மேலும் மேற்கண்ட நான்கு உணவுகளில் இருக்கும் புரதம் நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் என்பதும் உணவு அடிக்கடி சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran