1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (00:39 IST)

தாவரப்பாலில் இருந்து நவீன முறையில் தயிர்; விஞ்ஞானிகள் சாதனை

Garlic Milk
ஸ்பெயின் நாட்டின் போலிடெக்னிகா டி வலென்சியா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட பாலில் தானியங்கள் மற்றும் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட புரோபயோடிக் பாக்டீரியாக்களைக் கொண்டு நொதிக்கவிட்டு தயிர் பொருட்களை உருவாக்கியுள்ளார்கள்.
 
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் சிலருக்கு பசும்பால், லாக்டோஸ் மற்றும் பச்சையம் போன்ற பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்தும். பசும்பாலில் காணப்படும் கேசின் என்ற பொருளும், பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் போன்ற பொருட்களும் அலர்ஜி மட்டுமின்றி அவற்றில் உள்ள இரும்புத் தன்மையை உடல் உறிஞ்சிக் கொள்வதைத் தடுக்கும் தன்மையைக் கொண்டிருந்தன. மேலும் குடல் அழற்சி பண்புகளும் இந்த அலர்ஜியினால் அவர்களுக்கு ஏற்பட்டது.
 
இதற்கு மாற்றாக ஸ்பெயின் நாட்டின் போலிடெக்னிகா டி வலென்சியா நிறுவனத்தின் சக ஆய்வாளர்கள் ஒன்று சேர்ந்து தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட பாலில் தானியங்கள் மற்றும் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட புரோபயோடிக் பாக்டீரியாக்களைக் கொண்டு நொதிக்கவிட்டு தயிர் பொருட்களை உருவாக்கியுள்ளார்கள். இந்த வகை உணவுப் பொருட்கள் பயனாளர்களின் அலர்ஜித்தன்மையை நீக்குவதோடு நல்ல வளர்ச்சியையும் அளிக்கும் என்ற நம்பகத்தன்மையை அளிப்பதாக உள்ளது என்று ஆய்வாளர்களில் ஒருவரான சீலோ கொன்சாலஸ் தெரிவித்துள்ளார்.
 
தங்களின் ஆராய்ச்சியில் பாதாம், ஓட்ஸ், ஹேசல்நட் போன்ற பருப்பு வகைகளைப் பயன்படுத்தியுள்ள இந்த ஆராய்ச்சியாளர்கள் விரைவில் அக்ரூட் மற்றும் செஸ்ட்நட் போன்றவற்றை மூலப்பொருட்களாக பயன்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்ய உள்ளார்கள். குறைந்த கிளைசீமியா தன்மையுடன்(நீரிழிவுக்குப் பொருத்தமான) காணப்படும் இந்த உணவு தயாரிப்புகள் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களையும், கார்போஹைடிரேட் சத்துகளையும் கொண்டிருப்பவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுதவிர பி மற்றும் ஈ வைட்டமின் சத்துகளுடன் பைட்டோஸ்டெரோல் அல்லது போலிபினால் போன்ற நோய் எதிர்ப்பு காரணிகளுடனும், குடல் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்தும் கொண்டிருக்கும் இந்த உணவுப்பொருட்கள் பொட்டாசியம் சத்தினை அதிகமாகவும், சோடியம் சத்தினை குறைவாகவும் கொண்டிருக்கும் என்பதினையும் இந்த ஆய்வாளர்கள் பட்டியலிட்டுக் காட்டுகின்றனர்.