உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?

Sugapriya Prakash| Last Modified வியாழன், 18 பிப்ரவரி 2021 (14:36 IST)
உருளைக்கிழங்கின் தோலின் அடியில் இரும்புச்சத்து உண்டு. எனவே இதனை தோலுடன் வேகவைத்து பிறகுதான் தோலை உரிக்க வேண்டும். 

 
உடல் எடை கூடும். வாயுவை உண்டாக்கும் கிழங்கு இது. ஆகவே இஞ்சி, புதினா, எலுமிச்சம் போன்ற ஏதாவது இன்றைச் சேர்த்துச் சமைப்பது  நல்லது.
 
உருளைக்கிழங்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய  உருளைக்கிழங்கில் குறைந்த அளவு கலோரிகள் கிடைக்கின்றன.
 
உருளைக்கிழங்கு சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும்  உடலுக்குத் தந்து விடுகிறது.
 
குண்டான மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த  உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது குண்டான மனிதர்களை மேலும் குண்டாக்கி விடும்.
 
இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும்.
 
உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும்  முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :