1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 மார்ச் 2019 (16:16 IST)

இந்த மாதிரி நீளமா அழகா நகம் வளர்க்கணும்னு ஆசையா? இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

உங்களின் விரல் நகங்கள் அழகாகவும் நீளமாகவும் வீட்டிலிருந்தபடியே வளர்க்கலாம் . இந்த எளிதான டிப்ஸை பயன்படுத்தி உங்கள் விரல்களுக்கு அழகு சேருங்கள்.
 
பெண்களுக்கு அழகாகவும் நீலமாகவும் நகங்கள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் உண்டு. சில பெண்களுக்கு நகம் உடைவது உலகப் போர் நிகழ்ந்த அளவுக்குச் சோகம் தரும். இப்போது அந்த மன வருத்ததிற்கு பெரிய குட்பை சொல்லிவிடுங்கள்.
 
எலுமிச்சை:- 

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை நகங்கள் உடையாமல் இருக்க உதவுகின்றன. எலுமிச்சை நகத்தை வலிமையாக வைத்து நீளமாக வளர உதவுகிறது. 
 
 
செய்முறை 1:-
 
 1. அரை கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். 
 
 2. தண்ணீரை லேசாக சூடாக்கி, அதில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். 
 
 3. இந்த எலுமிச்சை கலந்த நீரில் உங்கள் விரல் நகங்களை 10-15 நிமிடங்கள் ஊற விடுங்கள். 
 
செய்முறை 2 :- 
 
எலுமிச்சையை நறுக்கிவிட்டு, அதனை உங்கள் விரல் நகத்தில் சில நிமிடங்கள் தொடர்ந்து தேய்க்கவும். எலுமிச்சை சாறு உங்கள் நகம் முழுவதும் படர்ந்து காய்ந்து விடும்.  ஒரு வாரத்தில் மூன்று முறை இப்படி செய்வதால் உங்கள் நகம் வலிமையாவதை உங்களால் உணர முடியும்.
 
தேங்காய் எண்ணெய் :- 
தேங்காய் எண்ணெய் மனித சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதம். தேங்காய் எண்ணெய் கொண்டு விரல் நகங்களை மசாஜ் செய்வதால் அவை வலிமையடைகின்றன. நகங்களின் வேர் தேங்காய் எண்ணெயால் வலிமை அடைகிறது. 
 
செய்முறை 
 
1. அரை கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். 
2. இதனுடன் 1/4 கப் தேன் மற்றும் நான்கு துளிகள் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் 
   ஆகியவற்றை சேர்க்கவும். 
3. இந்த எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து சூடாக்கவும். 
4. இந்த கலவையில் உங்கள் விரல் நகங்களை 15 நிமிடம் ஊற விடவும். 
 
 தினமும் இப்படி செய்வதால் உங்கள் விரல் நகம் வேகமாக வளரும்.
 
ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு :- 
 
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் விரல் நகங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது. இவை விரல் நகங்களுக்குள் எளிதில் ஊடுருவுகிறது. ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சையின் கலவை, நகங்களுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவை உடையாமல் பாதுகாக்கின்றன. 
 
செய்முறை 
 
1. 3 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். 
2. இந்த கலவையில் உங்கள் விரல் நகங்களை ஊற விடவும். 
    ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.
 
 
முட்டை ஓடுகள்:- 

ஒவ்வொரு முறையும் நாம் முட்டையை பயன்படுத்திவிட்டு, அதன் ஓடுகளை வீசி விடுகிறோம். ஆனால் அவை, விரல் நகங்களின் வேகமான வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவுகின்றன. 
 
செய்முறை
 
 1. உங்களுக்குத் தேவையான பொருட்கள் , முட்டை ஓடுகள், ஆளி விதைகள் மற்றும் பாதாம். 
 2. முட்டை ஓடுகளைத் தூளாக்கிக் கொள்ளவும். 
 3. பாதாம் மற்றும் ஆளி விதைகளையும் தூளாக்கிக் கொள்ளவும். 
 4. இந்த தூளை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். 
 5. வெதுவெதுப்பான பாலில் இந்த தூளை சேர்த்து உங்கள் நகங்களில் தடவவும்.
 6. சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். 
 
 ஒரு மாதம் தொடர்ந்து தினமும் காலையில் இந்த முறையை பின்பற்றுங்கள். உங்கள் நகங்கள் 
 நீளமாகவும் வலிமையாகவும் வளர்வதை உங்களால் பார்க்க முடியும்.
 
3. ஆரஞ்சு சாறு:

நகங்கள் வளர ஃபாலிக் ஆஸிட் மிகவும் அவசியமாக ஒன்று. ஆரஞ்சு சாற்றில் இந்த ஃபாலிக் ஆஸிட் அதிகம் உண்டு. இது நகங்கள் வேகமாக வளர உதவும்.
 
1. ஆரஞ்சு சாற்றை பிழிந்து வடிகட்டவும்
 
2. அந்த சாரில் விரல் நகங்களை வைத்து 10 நிமிடம் காத்திருக்கவும்.
 
3. பின்னர் கைகளை கழுவி, மிருதுவான துணியால் துடைக்க வேண்டும்.
 
இதை நாளுக்கு ஒரு முறை செய்தால் நகம் வளர்வதில் சிக்கல் இருப்பவர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் வேகமாக வளரும்.
 
இவற்றில் பல குறிப்புகள் குறுகிய காலத்தில் வேகமான நக வளர்ச்சியை உண்டாக்கும். ஆனால் இவற்றைப் பின்பற்றுவதில் நிதானம் மிக அவசியம். மேலும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.