வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 ஜூன் 2018 (17:39 IST)

மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் இவைதான்...

பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது ஒரு முக்கியமான காலகட்டமாகும். இந்த மாதவிடாய்தான் பெண்களின் கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை பற்றி தெரியப்படுத்தும் ஒன்றாக உள்ளது. 
 
இந்த காலகட்டத்தில் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அதே சமயம் சில உணவுகலை தவிர்ப்பதும் நல்லது அவை எவை என காண்போம். 
 
# வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லதாகும்.
 
# கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது. 
 
# அதே போல், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
 
# மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். 
 
# மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கலாம்.
 
# ஆல்கஹால் பருகுவது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். இது உடலுக்கு அதிக சோர்வை உண்டாக்கும்.