1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பை கரைக்கும் காளான்

இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பை கரைக்கும் காளான்

மக்களின் விருப்ப உணவான காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.


 


மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக்கூடியது. இதில் மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான டி அதிகம் உள்ளது.
 
காளானின் மகத்துவங்கள்
 
காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.
 
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோத்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது.
 
பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும். மார்பக புற்றுநோய் வராமல் இருக்க உதவும்.
 
சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. தாம்பத்திய உறவு பிரச்சனை, முதுமை குறைவு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உள்ளிட்ட நோய்கள் குணமடையும். இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துவிடும்.