புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 29 ஜனவரி 2022 (00:00 IST)

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைக்க உதவும் வெந்தயம்!

கரையும் நார்ப் பொருள்தான் இதயத்தில் கொழுப்பு படியாத தன்மையை ஏற்படுத்தும். கரையாத நார்பொருளே மலச்சிக்கலை  நீக்குவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில் வைத்திருக்கும். வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமானபொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்பு சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
 
* வெந்தயம் சைவ உணவுகளில் நார்ச்சத்து கொண்ட பொருள். சாம்பார், இட்லி, ரசம் என நாம் சமைக்கும் அனைத்து உணவிலும் வெந்தயம் சேர்ப்பது நல்லது. அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் கசப்பு தன்மை அதிகரிக்கும். 
* நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்பு ஆகிய மூன்று நோயுக்கும் ஒரு பொது மருந்தாகும் வெந்தயம் விளங்குகிறது. வெந்தயக் கீரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து  கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
 
* வெந்தயத்தை மோரில் ஊற வைத்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருப்பதுடன் கண்ணிற்கும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் பொடுகு தொல்லை விரைவிலே குணமாகும்.
 
* 10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து  கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.
 
* அரிசியுடன் சிறிது வெந்தயம் சேர்த்து பூண்டை தட்டி போட்டு கஞ்சி வைத்து குடித்தால் எளிதில் செரிக்கும். இளம்  தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.
 
* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள்  உருவாவதைத் தடுக்கிறது.