பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் நோய்கள் என்னென்ன தெரியுமா?
ஆண்களால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் ஒருசில பெண்கள் எவ்வளவுதான் சுகாதாரமாக இருந்தாலும் அவர்களுக்கு ஆண்களால் சில நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமானது கர்ப்பப்பைவாய் புற்றுநோய். இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்களையே தாக்கும். ஹெச்.பி.வி வைரஸ்களால் உண்டாகும் இந்த நோய் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் மட்டுமின்றி மலக்குடல்வாய் புற்றுநோய், தோல் புற்றுநோய் ஆகியவற்றை உண்டாக்கும் ஆற்றல் படைத்தவை. இதுகுறித்த ஒரே நல்லவிஷயம் இந்த வகை புற்றுநோயை தடுப்பூசி மூலம் வராமல் பாதுகாத்து கொள்ளலாம். சரி இந்த கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் எதனால் வருகிறது என்று தெரியுமா?
1. உடலுறவின்போது ஹெச்.பி.வி ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.
2. கர்ப்பப்பைவாயில் ஆணுறுப்பின் தோல் உராய்வதாலேயே, இந்த வைரஸ் பரவுகிறது.
3. ஹெச்.ஐ.வி கிருமியைப் (Human Immuno Deficiency Virus - HIV) போல விந்தணுக்கள் மூலமாகவோ, ரத்தத்தின் மூலமாகவோ இது பரவாது.
4. பல ஆண்களுடன் உடலுறவு, இளம் வயதில் திருமணம், ஹெச்.ஐ.வி கிருமி தாக்கம் ஆகியவற்றால், ஹெச்.பி.வி கிருமி பரவுகிறது.
5. வாய்வழி உறவு, பெண்கள் ஓரினச் சேர்க்கை ஆகியவற்றாலும் பரவும்
இந்த நோயை தடுப்பது எப்படி?
பெண்கள் சிறுமிகளாக இருக்கும்போதே அதாவது 9-13 வயது உள்ள போதே தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். 25 வயது வரை இதற்கான தடுப்பு மருந்துகள் உள்ளன. அதற்கு மேல் அவற்றின் வீரியம் படிப்படியாகக் குறையும்.
நோயின் ஆரம்பநிலையில் சிகிச்சை எடுத்த பெண்களில் 80 முதல் 90 சதவிகிதம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.