குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது அம்மாக்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு தனிக்கலை. அடம்பிடிக்காமல் சாப்பிடும் குழந்தை என்பதே உலகில் இல்லை என்கிற நிலையில் அந்த குழந்தைகளை அம்மாக்கள் சாப்பிட வைக்கும் செய்யும் தந்திரங்கள் சொல்லி மாளாது.
இரண்டு வயது வரை குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது ஓரளவுக்கு எளிதான விஷயம்தான். தாய்ப்பால் அல்லது ஒருசில வகை உணவுகள் மட்டுமே இந்த காலக்கட்டத்தில் கொடுக்கப்படுவதால் வேலை எளிது. ஆனால் கொஞ்சம் விபரம் தெரிந்த பின்னர் குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது யானையை கட்டி இழுப்பதற்கு சமம். இனி குழந்தைகளை சாப்பிட வைக்கும் முறையும் என்னவிதமான ஆரோக்கிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்
1. பெரும்பாலும் வீட்டில் தயாரித்த உணவை குழந்தைகளுக்கு கொடுப்பதையே பழக்கப்படுத்த வேண்டும். இதுதான் ஆரோக்கிய உணவுக்கான முதல் வழி. குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன் கேழ்வரகுக் கஞ்சி, அரிசிக் கஞ்சி செய்து தரலாம்.
2. ஒவ்வொரு உணவையும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்து அதன் சிறப்பை அவர்கள் புரியும் வகையில் கூற வேண்டும். பொதுவாக காலையில் இட்லி, பொங்கல், கேசரி, கிச்சடி ஆகிய உணவும், மதியம் சாதம், பருப்பு, காய்கறிகள், மசித்த கேரட், உருளைக்கிழங்கு, சாம்பார், ரசம், தயிர் சாதம், மோர் சாதம் மற்றும் மாலையில் ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம் ஆகியவிகளை கொடுக்கலாம். ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன், முட்டையின் மஞ்சள்கரு கொடு
3. குழந்தைகள் ஒரு வயது பூர்த்தி ஆன பின்னர் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். குறிப்பாக பற்கள் முளைக்க ஆரம்பித்ததும் அவர்களாக எடுத்துச் சாப்பிட வைக்கும் பழக்கத்தையும் சொல்லி கொடுக்கலாம்
4. கொஞ்சம் விவரம் தெரிந்த குழந்தைகளுக்கு உணவு உற்பத்தியாவது எப்படி என சொல்லித் தந்து, அதன் மேல் மதிப்பை ஏற்படுத்தி, உணவை வீணாக்காமல் சாப்பிட வைப்பதும் ஒரு அம்மாவின் கடமை
5. குழந்தைகளை கவரும் வகையில் உணவு தயாரிக்க வேண்டும். உதாரணமாக தோசையை சாதாரணமாக வட்டமாக சுடுவதற்கு பதிலாக விதவிதமான டிசைனில், தோசையின் மேல் காரட் போன்ற துறுவல்களை போட்டு கவர்ச்சியான வகையில் தயாரித்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருசிலர் தோசையின் மீது குழந்தைகளின் பெயரை ஜாமில் எழுதி தயாரிப்பார்கள்
6. பெரும்பாலும் வெளியில் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு ஜங்க் புட் உணவுகளை பழக்கப்படுத்த வேண்டாம். நமது பாரம்பரிய உணவுகளான தினை முறுக்கு, கம்பு தட்டை, பருத்திப்பால், கேழ்வரகுப் பால் போன்றவைகளை குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவது நல்லது.