சமையல் கேஸ் உடன் வீடு தேடி வரும் ஸ்ப்வைப் மிஷின்
சமையல் கேஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள், கட்டணம்பெறுவதற்கு ஸ்வைப் மிஷினையும் உடன் எடுத்து வருவார்கள். அதன்படி இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி சமையல் கேஸ் வாங்கி கொள்ளலாம்.
500 மற்றும் 1000 ரூபாய் நொட்டுகள் செல்லது என்ற அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு நாடுமுழுவதும் மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சமையல் கேஸ் விற்பனையிலும் மின்னணு பரிமாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதனால் இனி டெபிட் மற்றிம் கிரெடிட் கார்டுகளை கொண்டு சிலிண்டர் வாங்கி கோள்ளலாம். இதற்காக வீட்டுற்கு சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்கள், ஸ்வைப் மிஷினையும் உடன் எடுத்து வருவார்கள்.
இந்த திட்டத்தை ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.