திங்கள், 3 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (16:14 IST)

ஒபேரா மினியின் புதிய முக்கிய அம்சங்கள்

ஒபேரா மினியின் புதிய முக்கிய அம்சங்கள்

ஒபெரா எனும் மூன்றாம் தரப்பு பிரவுஸர் இந்தியர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கின்றது. இதனால் இதன் பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. எனவே ஒபேரா மினி புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது.




ஒபேரா மினி பிரவுஸர் மற்றும் யுசி பிரவுஸர் இடையே போட்டி நிலவுகின்றது. கூகுள் க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் போன்ற பிரவுஸர்கள் தான் யுசி பிரவுஸர். வேகத்தை ஒப்பிடும் போது யுசி பிரவுஸரை விட ஒபேரா மினி சிறந்தது ஆகும்.

ஒபேரா பயன்படுத்தினால் மொபைல் டேட்டா அதிகளவு சேமிக்க முடியும். இருந்தும் ஒபேரா மினி பிரவுஸர் புதிய அப்டேட் வழங்கி உள்ளது. இந்த அப்டேட் மூலம் பிரவுஸர் பயன்பாடு முன்பை விட வேகமாக இருப்பதோடு 90 சதவீதம் வரை டேட்டா சேமிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபேரா மினி பிரவுஸர் கூகுள் க்ரோம் பிரவுஸரை விட 72 சதவீதமும் யுசி பிரவுஸரை விட 64 சதவீதம் வேகமாக இயங்குகின்றது. ஒபேரா மினி புதிய அப்டேட் மூலம் பல்வேறு பயனுள்ள புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. டேட்டா சேமிப்பு, விளம்பரங்களைத் தடுப்பது, வீடியோக்களை சிறப்பாக வழங்குவது போன்ற அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒபேரா மினி பிரவுஸரில் வழங்கப்பட்டுள்ள ஸ்பீடு டயல் அம்சம் மூலம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். இதில் எல்லையில்லா தளங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆன்லைனில் வீடியோ பார்க்கும் ஒபேரா மினியின் வீடியோ பூஸ்ட் அம்சம் வீடியோவின் அளவைக் குறைத்து லோடு ஆகாமல் வீடியோக்களை பார்க்க வழி செய்யும். மேலும் ஒபேரா மினி பிரவுஸரில் இணையதள ஷார்ட்கட்களை ஹோம் ஸ்கிரீனில் பதிவு செய்ய முடியும்.

ஆன்லைன் வீடியோக்களை பெரும்பாலானோரும் டவுன்லோடு செய்யவே அதிகம் விரும்புவர். இதனாலேயே ஒபேரா பிரவுஸர் பிரத்தியேக மீடியா பிளேயர் ஒன்றை வழங்கியுள்ளது. ஒபேரா பிரவுஸரில் ஆட் பிளாக்கர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஒபேரா மினி பிரவுஸரில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட 13 மொழிகளில், நைட் மோடு அம்சத்துடன் வந்துள்ளது. ஒபேரா புரவுஸர் இணையதளங்களின் டேட்டா அளவினை குறைத்து இணையப் பக்கங்களின் எடையைக் குறைப்பதால் டேட்டா வேகம் குறைந்தாலும் சீரான வேகத்தில் பிரவுஸிங் செய்ய முடியும்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்