வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (10:48 IST)

இதுவே கடைசி: ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க ஆன்லைன் வழிமுறைகள்!!

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ஏப்ரல் மாதம் இறுதி வரை வருமான வரித்துறை காலக்கெடு அறிவித்துள்ளது. 


 
 
வருமான வரித்துறையின் அறிவிப்புப்படி இந்த மாதம் இறுதிக்குள் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை வேண்டும்.
 
அவ்வாறு இணைக்காவிட்டால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை சமர்ப்பித்த பின்னரே வங்கிக் கணக்கை நிர்வகிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது வருமான வரித்துறை.
 
இந்நிலையில் ஆன்லைனின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்....
 
# ஆன்லைனில் இணைக்க வருமன வரித்துறை E-filing portal-லை பயன்படுத்த வேண்டும்.  
 
# முதலில் லாக் இன் ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழைய வேண்டும். பாஸ்வேர்டு நினைவில்லாதவற்கள் Forget Password கொடுத்து பாஸ்வேர்டை ரீசெட் செய்யவும். 
 
# உங்கள் பான் நம்பர்தான் உங்கள் யூஸர் ஐடி. பான்கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். அப்போது ஒரு ஒடிபி எண் வரும்.
 
# ஒடிபி சரிபார்த்த பிறகு பாஸ்வேர்ட் உருவாக்க வேண்டும்.
 
# பாஸ்வேர்டு மாற்றிய பின் 12 மணி நேரம் கழித்தே பான் நம்பரோடு ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
 
# 12 மணி நேரம் கழித்து லாக் இன் செய்ததும், ஒரு பாப் அப் விண்டோ திரையில் தோன்றும்.
 
# பாப் அப் விண்டோ தோன்றவில்லையெனில் புரொபைல் செட்டிங்குக்குப் போய்க்கூட ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
 
# உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை கவனமாகப் பதிவு செய்யவும். 
 
# அனைத்துத் தகவல்களும் பொருந்தினால், ஆதார் எண்ணை கேட்கும். 
 
# ஆதார் எண்ணை டைப் செய்து “Link now” கொடுத்தாlல் பான் எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.
 
# மேலும் விவரங்களுக்கு ஆதார் உதவி எண்ணைத் (1800-300-1947 அல்லது 1947) தொடர்பு கொள்ளவும்.