1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (11:14 IST)

இந்தியாவில் ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் வீழ்ச்சி

இந்தியாவில் உள்ள ஐடி துறையில் ஆட்டோமேஷன் செய்யப்படுவதால் வேலை வாய்ப்புகள் விழ்ச்சி அடையும் என்று அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


 

 
பள பளவெனக் கண்ணாடி கட்டிடங்கள், அலுவலகம் முழுவதும் ஏசி, நுனி நாக்கில் ஆங்கிலம், உயர்தரமான வாழ்க்கை முறை இதுவே ஐடி துறையின் பிம்பமாக நாம் பார்ப்பது. ஆனால் அது, நமது பார்வையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
 
அட்டோமேஷன் என்பது மனிதர்களின் அனைத்து வேலைகளும் இயந்திரமயமாக்கப்பட்டு செய்யப்படுத்தப் படுகிறது. இதனால் ஊழியர்களின் தேவை அதிகளவில் குறைந்துள்ளது.
 
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான எச்ஃப்எஸ் ரிசர்ச்(HFS Research) சர்வதேச ஐடி சந்தையை ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவாக இந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சுமார் 9 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

அதிலும் இந்திய ஐடித்துறையில் ஆட்டோமேஷன் மூலம் 6.4 லட்சம் ஊழியர்கள் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது. 
 
இதன் தொடர்ச்சியாக அடுத்த 5 வருடங்களில் ஐடி துறையில் ஆட்டோமோஷன் ஆதிக்கத்தின் மூலம் லோ ஸ்கில்டு(Low Skilled) தர வேலைவாய்ப்புகள் 30 சதவீதம் வரையும், மீடியம் ஸ்கில்டு(Medium Skilled) வேலைவாய்ப்புகள் 8 சதவீதம் வரையும், மற்றும் ஹெய்-ஸ்கில்டு(High Skilled) வேலைவாய்ப்புகளில் 56 சதவீதம் வரை பாதிக்கப்பட உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ், டெக், மஹிந்திரா, டிசிஎஸ், அக்சென்சர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோமேஷன் செய்யப்பட்டதன் மூலம் ஊழியரிகளின் வேலைவாய்ப்புகள் குறைத்து கொண்டு வருகிறது.

இதனால் இந்திய ஐடி துறை மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்திக்க நேரிடும். இதுவரை ஐடி துறை காணாத மறுபக்கத்தை இனி வரும் காலங்களில் காண நேரிடும்.