ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (14:07 IST)

பெட்ரோல்-டீசல் விலை குறைகிறது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் – டீசல் விலை குறையக் கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
இது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து அறிவிப்பு வெளியிடும்.
 
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.50 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.1 ரூபாயும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.