ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2019 (13:50 IST)

கோட்டை விட்ட ப்ளிப்கார்ட்: அமேசானுக்கு அடித்த யோகம்!!

அமேசானின் போட்டி நிறுவனமான ப்ளிப்கார்ட், அமேசானை விட குறைந்த விற்பனையை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 
 
ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் விழாக்காலங்களில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வழக்கம். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு தனது விழாக்கால விற்பனையை கிரேட் இண்டியன் பெஸ்டிவல’ என்ற பெயரில் அமேசான் வழங்கியது. அதேபோல் ப்ளிகார்ட்டும் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் சிறப்பு விற்பனையை வழங்கியது. 
இந்நிலையில், அமேசான் நிறுவனம் ‘கிரேட் இண்டியன் பெஸ்டிவல்’ விற்பனை துவங்கிய 36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகிவிட்டது என தகவல் தெரிவித்துள்ளது. அதோடு, வழக்கமான விற்பனை அளவைவிட இந்த முறை 10 மடங்கு அதிக விற்பனை நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. 
 
அதேபோல, ப்ளிப்கார்ட் நிறுவனமும் தனது விற்பனை குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்நாளில் கடந்த ஆண்டைவிட 2 மடங்கு அதிக விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஆடை, அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை மக்கள் அதிக அளவில் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அமேசானுடன் ஒப்பிடும் போது ப்ளிப்கார்ட்டின் விற்பனை விகிதகம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.