1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (18:53 IST)

கேண்டி கிரஷ் கேம் அடிமைகளா நீங்கள்? இது உங்களுக்குதான்!!

பசி தெரியாமல், தூக்கத்தை கலைத்துக்கொண்டு கேண்டி கிரஷ் கேம் விளையாடும் பலரை பார்த்திருப்போம். அந்த கேம் பற்றிய சிறிய தொகுப்பே இது.


 
 
2012 ஏப்ரல் மாதம் கேண்டி கிரஷ் கேம் வெளியானது. இந்த கேம்-ஐ கிங் நிறுவனம் வெளியிட்டது. அந்த சமயத்தில் மொபைல் மார்கெட் மிக வேகமெடுத்தால் ஒரே ஆண்டில் நாற்பது கோடிக்கும் அதிகமான மக்கள் இதை டவுன்லோட் செய்தனர்.
 
2011-ல் 62 மில்லியன்கள் ஈட்டிக்கொண்டிருந்த கிங் நிறுவனம் 2013-ல் 300 மடங்கு லாபம் கண்டு 1.88 பில்லியன் டாலர் லாபத்தை எட்டியது. இதற்கு முழுமையான காரணம் கேண்டி கிரஷ் கேம்.
 
மூளைக்கு வேலையும் கொடுக்கும் முற்றிலும் பாசிட்டிவான கேம் என்பதால் மக்கள் பலரும் இதை விரும்பினர். மேலும், மக்களது மன அழுத்தத்தைக் குறைக்க, கேண்டி கிரஷ் பெரிய அளவில் உதவுகிறது என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.