தீபாவளிப் பண்டிகை கொண்டாட காரணம் என்ன?


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 31 அக்டோபர் 2015 (19:53 IST)
இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகை தீபாவளிதான். மதம், மொழி, கலாச்சாரம் இவற்றினால், ஏனைய பண்டிகைகளுக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தில் வித்தியாசமிருக்கலாம்.

 

ஆனால், ஏழை முதல் பணக்காரன் வரை எல்லா இனத்தவராலும் ஒரே மாதிரி வரவேற்புப் பெறும் பண்டிகை தீபாவளி. இந்தியாவின் வட மாநிலங்களில் இதைத் ' திவாளி' என்கிறார்கள். அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் தீபாவளிப்பண்டிகை வருகிறது.
 
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். ஒளித்திருநாள் என்று கூறுவதும் பொருந்தும். வட மாநிலங்களில், தீபாவளியின்போது வீடுகளில் தீபாலங்காரம் விசேடமான அம்சமாகும். தீவாஸ் எனப்படும் அகல் விளக்குகள் அங்கே ஒளி வீசிச் சிரித்துக்கொண்டிருக்கும்.
 
இந்தியாவின் தென் மாநிலங்களில், வீடுகளிலும், கோயில்களிலும் அகல் விளக்குகளால் அலங்காரம் செய்யும் வழக்கத்தைக் கார்த்திகை மாதத்துக் கிருத்திகையில் வரும் கார்த்திகைப் பண்டிகையில் கடைப்பிடிக்கின்றார்கள். இதேபோல், 'திவாளி' பண்டிகை வட மாநிலங்களில் லக்ஷ்மி பூஜையாகக் கருதப்படுகின்றது. வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அந்த ஆண்டின் புதுக்கணக்கை 'திவாளி' பண்டிகையின்போதுதான் ஆரம்பிப்பது வழக்கம்.
 
தீபாவளிப் பண்டிகை தோன்றக் காரணங்கள்:
 
நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார், கண்ணன் (கிருஷ்ணன்).
 
தன் தாயைத்தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான், நரகாசுரன். எந்தத் தாயாவது தன் மகனைக் கொல்லுவாளா? ஆனால், சத்தியபாமாவுக்கோ, நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது. தெரியாதபடி மாயம் செய்து மயங்கியவர் கிருஷ்ணன்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...


இதில் மேலும் படிக்கவும் :