தை பூசத் திருவிழா: புதுயுகம் தொலைக்காட்சியில் சிறப்பு ஒளிபரப்பு

Suresh| Last Modified செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (12:58 IST)
தை பூசத் திருவிழாவையொட்டி, தமிழகத்திலும் மலேசியாவிலும் உள்ள முக்கிய முருகன் கோவில்களில் நடைபெறும் பூஜைகளை பக்தர்களுக்காக புதுயுகம் தொலைக்காட்சியில் சிறப்ப்பு சிறப்பு ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.  
தை பூசம்! உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் கடவுள் முருகனை வழிபடும் தினம். முழு நிலவு பூச நட்சத்திரத்துக்கு வரும் இந்த சிறப்பான தினத்தில் முருகன் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனைகளும் நடக்கும்.
 
குறிப்பாக மலேசியாவில் பத்துமலை, பினாங்கு, ஈப்போ மற்றும் தமிழகத்தில், பழனி, திருத்தணி, விராலிமலை, மருதமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட முக்கிய திருத்தலங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
 
அக்கோவில்களுக்கு நேரடியாக செல்ல இயலாத பக்தர்கள் தங்கள் இல்லத்திலிருந்தபடியே இந்த வழிபாடுகளை கண்டுகளிப்பதற்காக புதுயுகம் தொலைக்காட்சி சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
 
தமிழகத்திலும் மலேசியாவிலும் உள்ள முக்கிய முருகன் கோவில்களில் நடக்கும் பூஜைகளை தனது நேயர்களுக்காக வழங்குகிறது.
 
தை பூசத் திருவிழா! சிறப்பு ஒளிபரப்பு 03.02.2015 (இன்று) செவ்வாய்கிழமை மாலை 5 .00 - 6.30 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :