ஒளிப்பிழம்பாய் காட்சியளித்த அண்ணாமலையார்


Sasikala| Last Modified புதன், 25 நவம்பர் 2015 (11:57 IST)
இன்று (புதன்கிழமை) கார்த்திகை தீபத் திருவிழா என்பதால் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

 

 
மனிதர்கள் அனைவரும் நிம்மதியை நாடுகிறார்கள். அந்த நிம்மதியை பெற இறைவனை சரணடைவதே ஒரே வழி.

திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் நடத்திய திருவிளையாடலை குறிப்பிடும் வகையில், கர்த்திகை திருநாள் அன்று திருவண்ணாமலையில் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.  இதற்கான வரலாற்றை காண்போம்.
 
மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மதேவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. யார் பெரியவர்? என்பதுதான் அது. அந்த பிரச்சனையை தீர்க்கசிவபெருமானை நாடினார். மகாவிஷ்ணுவும், பிரம்மதேவரும் தங்கள் பிரச்சனைகளை கூறினர்.
 
ஒளிப்பிழம்பாய் சிவபெருமான்
 
சிவபெருமானும் பிரச்சனைக்கு தீர்வு கூற ஒப்பு கொண்டார். நான் அக்னி ஜூவாலையாக எழுந்து நிற்பேன்.  என்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்படும் என்றார். இருவரும் ஒப்புக்கொண்டனர்.

சிவபெருமான்  ஒளிப்பிழம்பாய் நின்றார்.
 
அடி முடியைக் காண
 
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து  நிலத்தை துளைத்துக் கொண்டு வேகமாக முன்னேறிச் சென்றார். பிரம்மதேவரோ அன்னப்பறவை வடிவெடுத்து வானத்தை நோக்கி பறந்து சென்றார்.  
 
அடியை நோக்கி விஷ்ணுவும், முடியை நோக்கி பிரம்மாவும் செல்லச் செல்ல அவர்களுக்கு களைப்புதான் ஏற்பட்டதே தவிர, இருவரும் இலக்கை அடைய முடியவிலலை.
 
பல நூறு ஆண்டுகளாகி விட்டது.  தன்னால் முடியவிலலை என்று நேராகவே சிவபெருமானிடம் வந்து ஒப்புக்கொண்டார் மகாவிஷ்ணூ, ஆனால் பிரம்மதேவரை காணவில்லை. அவரால் சிவபெருமானின் உடலில் இருந்து வெளிப்பட்ட அக்னி ஜூவாலையை தாளமுடியவில்லை. அன்னப்பறவையாக இருந்த அவரது இறக்கையில் பல சிறகுகள் உதிர்ந்து விட்டிருந்தன. அப்போது சிவபெருமானின் தலையில் சூடப்பட்டிருந்த தாழம்பூ ஒன்று பூமியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
 
தாழம்பூவின் பொய் சாட்சி
 
பூமியை நோக்கி சென்றுகொண்டிருந்த தாழம்பூவிடம் பிரம்மதேவர் “தாழம்பூவே! சிவபெருமானின் முடியைக் காண்பதற்கு இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்” என்று கேட்டார்.
 
அதற்கு தாழம்பூ, ஐயா! நானே பல நூறு ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். தாங்கள் இப்போது தான் பாதி அளவு வந்திருக்கிறீகள்.  மேலே செல்ல உங்களுக்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் பிடிக்கும்.
 
இதனால் அயர்ச்சி அடைந்த பிரம்மதேவர், “தாழம்பூவே! எனக்காக நீ ஒரு பொய் சொல்ல வேண்டும். நான் சிவபெருமானின் முடியைக் கண்டதாக, ஈசனிடமும், மகாவிஷ்ணுவிடமும் கூறினால், உனக்கு தெவையானதை நான் உனக்கு செய்து தருகிறேன்” என்று கூறினார்.
 
முதலில் மறுப்பு தெரிவித்த தாழம்பூ, பெரும் போராட்டத்திற்கு பின்னர் ஒப்புக்கொண்டது.  தாழம்பூவுடன் பூமிக்கு வந்த பிரம்மதேவர், வெற்றி! வெற்றி! என்று முழக்கமிட்டார்.
 
அவரது முழக்கத்தைக் கொண்டு, தாங்கள் ஈசனின் முடியை கண்டு விட்டீர்களா? என்று கேட்டார் மகாவிஷ்ணு.  ஆம்! நான் கண்டு விட்டேன். அதற்கு சாட்சியாக இந்த தழம்பூவை அவரது தலையில் இருந்து எடுத்து வந்தேன் என்றார் பிரம்மதேவர். தாழம்பூவும் ஆமாம் என்று சாட்சியம் கூறியது.
 
பிரம்மதேவருக்கு சாபம்
 
மகாவிஷ்ணு ”அப்படியானால் நீங்கள்தான் என்னை விட பெரியவர்” என்று தன் தோல்லியை ஏற்க முன்வந்தார். அதற்குள் சிவபெருமான் கண்களில் நெருப்பு பறக்க பிரம்மதேவரை நோக்கி, ‘என் முடியை கண்டதாக பொய் கூறிய உனக்கு இனிமேல் பூலோகத்தில் கோவில் கட்டி வழிபாடு நடத்தப்படாது.  உனக்கு பொய் சாட்சி கூறிய தாழம்பூவை என் பூஜைகளில் நான் ஏற்க மாட்டேன் என்று சாபம் கொடுத்தார்.  இதனால் செய்வதறியாது திகைத்தனர் பிரம்மதெவரும், தாழம்பூவும்.  ஈசனின் வாக்குப்படி பூலோகத்தில் பரம்மதேவருக்கு என்று தனிக்கோவில்கள் கிடையாது.  சிவபொருமானின் பூஜையில் தாழம்பூவுக்கும் இடம் கிடையாது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.
 
கார்த்திகை தீபத் திருநாள்
 
சிவபெருமானின் அடி முடி காண முடியாத ”அக்னி ஜோதியாக நின்ற தினம் கார்த்திகை தீபத்
திருநாள்” ஆகும். இத்னை நினைவு கூறும் வகையில்தான் திருவண்னாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :