சவூதி அரேபியாவுக்குச் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேவை

Annakannan| Last Modified வியாழன், 20 நவம்பர் 2014 (17:53 IST)
சவூதி அரேபிய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு அனுபவம் வாய்ந்த பெண் செவிலியர்களும் பல்வேறு மருத்துவப் பணியாளர்களும் தேவைப்படுகின்றனர்.

இது தொடர்பாகத் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்திற்கு உட்பட்ட கிங் சவுத் மெடிகல் சிட்டி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன் மூன்று வருட அனுபவம் பெற்ற அவசரப் பிரிவு (Emergency)
மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவில் (ICU)அனுபவத்துடன் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள், பிஎஸ்சி/டிப்ளமோ தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்ற பயோஸ்டேடிஸ்டியன்கள் (Biostatistician), எகோ டெக்னிசியன்கள் (Echo Technicians) மற்றும் தரக் கட்டுப்பாடு பணியாளர்களுக்கான (Quality Control) நேர்முகத் தேர்வு 28.11.2014 முதல் 30.11.2014 வரை புதுடில்லியில் நடைபெற உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இதர சலுகைகள் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் அனுபவம் இருப்பின், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றுடன், எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு
நிறுவனத்திற்கு நேரிலோ அல்லது [email protected] என்ற மின்னஞசல் முகவரிக்கோ 24.11.2014க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 044-22502267/22505886 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திற்கு சென்றும் அறியலாம்.

இவ்வாறு தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :