விசாகப்பட்டினம் இரும்பு ஆலை மருத்துவமனையில் வேலை வாய்ப்பு


Ashok| Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2015 (19:53 IST)
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் உள்ள மருத்தவமனைக்கு செவிலியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் செவிலியர், துணை மருத்துவர் ஆகிய பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 
பணி: Junior Nurse Trainee

பணிக்கோடு: 112
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி: Physiotherapist Trainee

காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிசியோதெரபி பட்டப்படிப்பு முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி: Technician (ECG) Traninee

பணிக்கோடு: 116
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பிரிவில் +2 தேர்ச்சி பெற்று EGC பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி: Pharmacist Trainee

பணிக்கோடு: 117
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று Pharmacy படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட டிப்ளமோ பார்மசி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது தொழில்திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை RINL Recruitment A/C No. 30589461220 என்ற வங்கிக் கணக்கில்
எஸ்பிஐ வங்கி கிளையில் செலுத்த வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 27.10.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:27.10.2015

இந்த பணிக்கான முழுமையான விவரங்கள் அறிய www.vizagsteel.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :