தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 143 காலியிடங்கள்

Ashok| Last Updated: வியாழன், 10 செப்டம்பர் 2015 (18:36 IST)
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்கள் உள்பட 143 காலியிடங்களுக்கான   அறிவிப்பை இந்திய அஞ்சல்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள 142 தபால்காரர் பணியிடங்கள், 1 மெயில்கார்டு பணியிடம் ஆகியவற்றை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
விண்ணப்பிக்க விரும்புவோர், 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.dopchennai.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 7 ஆம் தேதி என்றும்  ஆகும்.விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். 
அந்த  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :