கடந்த 18 ஆண்டுகளில் 200 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா - ஸ்டாலின்

Ilavarasan| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (19:00 IST)
பெங்களூருவில் நடைபெறுவதென்ன? கிட்டத்தட்ட 18 ஆண்டுகாலமாக 200 முறைக்கும் மேல் வாய்தா வாங்கியிருக்கும் வழக்குதான் பெங்களூரில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு என்று வடசென்னை பிரச்சாரத்தில் ஸ்டாலின் கூறினார்.
மேலும், பெங்களூரு நீ மன்றத்தில் அரசுத்தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.

1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர்,

2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா.

3. நீலாங்கரையில் 2 ஏக்கர்.

4. கொடநாட்டில் 900 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். (இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும் இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்).
5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.

6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் ஆயிரத்து 190 ஏக்கர்.

6. தூத்துக்குடி மாவட்டம்
திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.

7. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்

8. 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள்

9. ஐதராபாத்தில்
திராட்சைத் தோட்டம்.


இதில் மேலும் படிக்கவும் :