அரவிந்த் கெஜ்ரிவாலை முதுகில் பஞ்ச் விட்ட நபர்!

தாக்கியவர் யார் என்று தெரியவில்லை!

Muthukumar| Last Updated: வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (19:05 IST)
தெற்கு டெல்லி, தக்ஷின்புரி பகுதியில் சாலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை மர்ம நபர் ஒருவர் முதுகில் குத்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதரவாளர்களுடன் கை குலுக்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் புகுந்து கெஜ்ரிவால் முதுகில் ஒரு குத்து விட்டார், மேலும் அவர் கெஜ்ரிவாலைத் தாக்கவும் முயற்சி செய்துள்ளார்.
இந்தத் தக்குதலுக்கு காரணம் பாஜக.தான் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்:

பிரதமராவதற்காக சில நபர்கள் என்ன அளவுக்கு வேண்டுமானாலும் செல்கிறார்கள். அவர்கள் என்ன செய்யவேண்டுமோ செய்யட்டும், நம் மதம் அகிம்சையை வலியுறுத்துகிறது, நாங்கள் கையை உயர்த்தினால் அந்த இயக்கம் முடிவுக்கு வந்து விடும்" என்றார் கெஜ்ரிவால்.

தாக்குதலுக்கு எதிர்வினையாற்றவேண்டாம் என்று அவர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலைத் தாக்கியவரை ஆம் ஆத்மி கட்சியினர் நையப்புடைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

தாக்கியவர் யார் என்பது இன்னமும் தெரியவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :