வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பஞ்சாங்கம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (06:30 IST)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமையும்?

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமைய இருக்கிறது என்பது குறித்து ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரண் கணித்துக் கூறுகிறார்...
 
மேஷம்:

காலை மணி 6.30 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.    
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
ரிஷபம்:

காலை மணி 6.30 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பழைய கடன், பகையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.    
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
மிதுனம்:

சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல், வீண் செலவுகள் வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.  
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
கடகம்:

சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.  
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
சிம்மம்:

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.   
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
கன்னி:

காலை மணி 6.30 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் அசதி, சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.  
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
துலாம்:

காலை மணி 6.30 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.  
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
விருச்சிகம்:

பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள்.       
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
தனுசு:

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.     
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
மகரம்:

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். 
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
கும்பம்:

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.   
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
மீனம்:

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....