1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பஞ்சாங்கம்
Written By லெனின் அகத்தியநாடன்

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமையும்?

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் எப்படி அமைய இருக்கிறது என்பது குறித்து ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரண் கணித்துக் கூறுகிறார்...
 
மேஷம்:

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும்.  
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
ரிஷபம்:

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் தாக்கிப் பேச வேண்ட்£ம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். எதிர்பாராத திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். 
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
மிதுனம்:

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.  
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
கடகம்:

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.     
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
சிம்மம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.  
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
கன்னி:

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.     
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
 
துலாம்:

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.     
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
விருச்சிகம்:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்க்ள. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.  
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
தனுசு:

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.   
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
மகரம்:

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.  
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
கும்பம்:

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்புகளை ஒப்படைப்பார்.    
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
மீனம்:

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அழகு, இளமைக் கூடும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். 
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்