செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Murugan
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (12:13 IST)

தமிழகம் வந்த பிரதமர் மோடி - அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்க இன்று பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தார்.


 

 
அப்துல்கலாமின் நினைவிடம் ராமேஸ்வரம் பேக்கரும்பு எனும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.16 கோடி 5 லட்சம் செலவில் அவருக்கு அங்கு மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைப்பதற்காக, மோடி தனி விமானம் மூலம் மதுரை வந்து, அதன் பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார். 
 
இதனால் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை அமைச்சர்கள் வரவேற்றனர். அங்கு வந்த மோடி, கலாமின் மணிமண்டபத்தை அவர் திறந்து வைத்தார். அவரோடு மத்திய அமைச்சர் வெங்கயாநாயுடு மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடன் உள்ளனர்.
 
கலாமின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் மோடி. அதன் பின், கலாமின் உறவினர்களிடம் அவர் உறையாடினார். அதன் பின், மணிமண்டபத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.