ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By bala
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (16:05 IST)

இடிந்து விழும் நிலையில் மின் கம்பம்- கண்டுகொள்ளுமா மின்சார வாரியம்?

இடிந்து விழும் நிலையில் மின் கம்பம் உள்ளது. இதனை உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.



 

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்காபேட்டை அடுத்த செம்பியன்மாதேவி ஊராட்சிக்கு உட்பட்டது உள் பரமேஸ்வரிமங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசாமி  என்பவரது விவசாய நிலத்தில் போடப்பட்டுள்ள உள்ள ஒரு மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் முழுவதும் உடைந்து விழுந்து விட்டது. வெறும் கம்பி மட்டுமே வெளியே தெரிந்தபடி உள்ளது. இந்த கம்பத்தில் இருந்து அருகில் உள்ள பல மின் மோட்டார்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் முக்கிய மின்கம்பிகள் இந்த மின் கம்பி வழியாக தான் பிரிந்து செல்கிறது. அனைத்து மின் கம்பிகளும் இந்த மின் கம்பம் வழியாக செல்வதால் அதிக கனமாக உள்ளது. ஆனால் மின்கம்பம் சிமெண்ட் காரைகள் முழுவதும் விழுந்து விட்டதால் அதை தாங்கும் அளவுக்கு சக்தி இல்லை.

இதனால் எப்போது கீழே விழுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இந்த மின் கம்பம் கீழே விழுந்தால் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை உருவாகும். ஆகவே உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பு இந்த மின் கம்பத்தை பொதுமக்கள் நலன் கருதி மின்துறை செயற்பொறியாளர்கள் மாற்றி அமைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்