திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (09:59 IST)

ஆயிஷாவா இது? பிக்பாஸுக்கு பின் ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே!

சீரியல் நடிகையான பொன்மகள் வந்தால் சீரியலில் நடித்து நடிகையாக மக்களுக்கு பரீட்சியமானார். அந்த சீரியல் அவருக்கு நல்ல ரீச் கொடுத்த போது திடீரென அந்த சீரியலில் இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறி சர்ச்சை கிளப்பி வெளியேறினார். 
 
அதன் பின்னர் தொடர்ந்து சத்யா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். இதனிடையே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களின் மனதை கவர்ந்தார். பின்னர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறிய ஆயிஷா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 
இதனால் சமூகவலைத்தளங்களில் புது புது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் செம அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.